கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், அன்னதா ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் அன்னதா ஏகாதசி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஸ்ரீகிருஷ்ண பலராமருக்கு ரோஜா, மல்லி, சாமந்தி, பால், தேன், பல வகை பழங்கள் உள்ளிட்ட பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.