தளியில் கொய் மலர் மையம் திறப்பு

தளியில் இண்டோ இஸ்ரோ வேளாண்மை திட்டத்தின் கீழ் கொய் மலர் மகத்துவ மையத்தை இஸ்ரேல் தூதர் கில் ஆஸ்கேல் புதன்கிழமை திறந்து வைத்தார் .

தளியில் இண்டோ இஸ்ரோ வேளாண்மை திட்டத்தின் கீழ் கொய் மலர் மகத்துவ மையத்தை இஸ்ரேல் தூதர் கில் ஆஸ்கேல் புதன்கிழமை திறந்து வைத்தார் .
விழாவில் அவர் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் கொய் மலர்களுக்கான மகத்துவ மையத்துக்கு  2012-13 ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  2012 அக்டோபரில் அடிக்கல் நாட்டினார்.  இத்திட்டம், இஸ்ரேல் தொழில்நுட்ப வல்லுனர்களின் வழிகாட்டுலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
கொய் மலர்களுக்கான மகத்துவ மையத்தின் முக்கிய குறிக்கோள் கொய்மலர் சாகுபடிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், மாதிரி செயல் விளக்க திடல்கள் அமைத்தல், மலர் சாகுபடியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கொய்மலர் சாகுபடி உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் ஆகும்.
ரோஜா, ஜெர்பெரா, கார்னேசன், டிரசினா, கார்டிகளின் மகாத்மா, அர்க்கா பாம்ஸ், சாங் ஆப் இந்தியா, சாங் ஆப் ஜெமைக்கா போன்ற கொய் மலர்கள் பசுமைக் குடில்கள் மற்றும் நிழல்வலை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உயர் சாகுபடி முறைகள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
இம் மையத்தின் மூலம்  கொய்மலர் சாகுபடி தொழில் நுட்பப் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் 500 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மகத்துவ மையத்துக்கு இந்நாள் வரை சுமார் 1,500 பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்றார். 
விழாவில் கவுன்சில் ஜென்ரல் ஆப் இஸ்ரேல் தன குருஷ், இண்டோ இஸ்ரேல் வேளாண்மை திட்ட உறுப்பினர் டேன் அலுப், தோட்டக்கலைத் துறை மற்றும் மலை பயிர்கள் துறை ஆணையர் வி. சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், சார் ஆட்சியர் சந்திரகலா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com