நகராட்சிப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சிப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சிப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் தேவி தலைமை வகித்தார். பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் முருகன், நுகர்வோர் மன்றத்தை தொடங்கி வைத்து பேசியது: நியாய விலைக் கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் பொருள்களின் எடை, காலாவதியான தேதி உள்ளிட்ட குறிப்புகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.  இதுகுறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு தேவை.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் குறைகள் ஏதும் இருந்தால், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல் உண்மையெனில், நியாய விலைக் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com