"ஒசூரில் மலர், காய்கறி கண்காட்சி நடத்த நடவடிக்கை'

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மலர், காய்கறி கண்காட்சி விரைவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மலர், காய்கறி கண்காட்சி விரைவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியின் நிறைவு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த மா உற்பத்தியாளர்கள், அரங்குகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியது:
 30 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு 5.75 லட்சம் பொதுமக்கள் வருகை புரிந்தனர். 45 அரசு, தனியார் பள்ளிகளின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், 50 அரசுத் துறை அரங்குகள் உள்பட 80 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வெளிநாட்டிற்கு 30 சத பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் 60 சத மா சாகுபடி செய்யப்படுகிறது. ஒசூரில் விரைவில் காய்கறி, மலர் கண்காட்சி நடத்தப்படும் என்றார்.
 சிறந்த அரங்கமாக தேர்வு செய்யப்பட்ட காவல் துறைக்கு முதல் பரிசும், கால்நடை பராமரிப்புத் துறைக்கு 2-ஆம் பரிசும், தோட்டக்கலை துறைக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
 இந்த விழாவில் கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com