கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிற

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையோர கிராமமான வரமலைகுண்டாவில் தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் முகாமை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அண்மையில் தொடக்கி வைத்தார்.
 அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்படும். அதில் 10 சத நபர்களின் சளி, இருமல், ஆஸ்துமா போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவர். இதில் 5 முதல் 10 சத காச நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
 காசநோயின் அறிகுறிகளான இரண்டு வார கால தொடர் இருமல், சளி, எடைகுறைவு, பசியின்மை, நெஞ்சுவலி போன்றவைகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள், தொழில் புரியும் இடங்கள், சுங்கத் தொழில் நிறுவனங்கள், கட்டட தொழில் நடைபெறும் இடங்களில் நடைபெறும் முகாம்கள் மூலம் காசநோய் பாதிப்புக்குள்ளானோர் கண்டறியப்பட உள்ளனர். இந்த முகாம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com