மணல் கொள்ளை: சூளகிரி சின்னாறு அணையில் சார்-ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சின்னாறு அணையில் மணல் கொள்ளை தொடர்பாக சார்-ஆட்சியர் சந்திரகலா விசாரணை நடத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சின்னாறு அணையில் மணல் கொள்ளை தொடர்பாக சார்-ஆட்சியர் சந்திரகலா விசாரணை நடத்தினார்.
 சூளகிரி சின்னாறு அணை நீரின்றி வறண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் மூலம் மணலை அள்ளிச் செல்கின்றனர். இதையறிந்த ஓசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா, வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருடன் சின்னாறு அணைக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் . அப்போது மணல் கொள்ளையைத் தடுக்க தவறிய சூளகிரி கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
 சூளகிரி சின்னாறு அணையைப் பார்வையிடும்போது சார் -ஆட்சியர் சந்திரகலாவுடன், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com