ராணுவத்தில் சேரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு மானியம்

ராணுவத்தில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.

ராணுவத்தில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.
 இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் செண்பகவல்லி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாட்டிலிருந்து ராணுவப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ராணுவப் பயிற்சி காலத்தின்போது தொகுப்பு மானியம் வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி முப்படையில் நிரந்தரப் படைத் துறை அலுவலர் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றுவரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால பயிற்சியில் ஈடுபடும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றுவரும் முன்னாள் வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
 இந்தத் சலுகை 1.4.2015 அன்று முதல் படைப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு பொருந்தும். தகுதியுள்ள, விருப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி, படிவம் பெற்று, நிறைவு செய்து சமர்ப்பிக்கலாம் என அதில் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com