கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் இன்று அப்துல் கலாம் நினைவு அமைதிப் பேரணி

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி,

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய 4 இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் அமைதிப் பேரணி வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. தினமணி நாளிதழ் இணைந்து இப் பேரணியை நடத்துகிறது.
 கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்துப் பேரணியை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பள்ளி அருகிலிருந்து தொடங்கும் பேரணி வட்டச் சாலை, கார்நேஷன் திடல் சாலை, கூட்டுறவு குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, பெங்களூர் சாலை வழியாகச் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நிறைவு பெறுகிறது.
 ஒசூரில்.. ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேரணிக்கு, ஹோஸ்டியா தலைவர் ஞானசேகரன் தலைமை வகிக்கிறார். பள்ளித் தலைமையாசிரியர் சந்திரன் முன்னிலை வகிக்கிறார். பல்வேறு தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.
 பேரணியானது ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி நேதாஜி சாலை, ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ஏரி தெரு, வட்டாட்சியர் அலுவலகம், உழவர் சந்தை, ராயக்கோட்டை சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நிறைவு பெறுகிறது.
 ஊத்தங்கரையில்... ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ச்சுணன் தொடங்கி வைக்கிறார். பள்ளி தலைமையாசிரியர் மாதப்பன் தலைமை வகிக்கிறார். வட்டாட்சியர் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். பள்ளி வளாகத்தில் தொடங்கும் பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் செல்கிறது.
 போச்சம்பள்ளியில்... அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கும் பேரணியை வட்டாட்சியர் பண்டரிநாதன் தொடங்கி வைக்கிறார். அரசு மருத்துவர்கள் கந்தசாமி, வீரக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், காவல் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com