ஜி.எஸ்.டி. வரியால் உள்ளூர் குளிர்பானங்களின் விலை உயரும்

ஜி.எஸ்.டி வரியால் சுதேசி குளிர்பானங்களின் விலை உயரும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற

ஜி.எஸ்.டி வரியால் சுதேசி குளிர்பானங்களின் விலை உயரும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சுதேசி குளிர்பான தயாரிப்பாளர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 இந்தச் சங்கத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
 வணிகர் சங்கத் தலைவர் கேசவன், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கார்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் குளிர்பானங்களுக்கு 12 சத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுதேசி குளிர்பானங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்ந்து 40 சத வரி விதிக்கப்பட்டுள்ளது.
 இதனால், உள்ளூர் குளிர்பானங்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே, உள்ளூர் குளிர்பானங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com