ராஜஸ்தானிலிருந்து பாதுகாப்புடன் தமிழகம் வந்த கால்நடைகள்

ராஜஸ்தானிலிருந்து தமிழக கால்நடைத் துறை சார்பில் லாரிகளில் கொண்டுவரப்பட்ட தார்பார்க்கர் மற்றும சாலிவால் மாடுகள் பலத்த பாதுகாப்புடன் தமிழக எல்லையான ஒசூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்தது.

ராஜஸ்தானிலிருந்து தமிழக கால்நடைத் துறை சார்பில் லாரிகளில் கொண்டுவரப்பட்ட தார்பார்க்கர் மற்றும சாலிவால் மாடுகள் பலத்த பாதுகாப்புடன் தமிழக எல்லையான ஒசூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்தது.
 செட்டிநாடு அரசு கால்நடை பண்ணையில் வளர்க்க ரூ.50 லட்சத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியிலிருந்து லாரிகள் மூலம் 50 மாடுகள் ஏற்றி வரப்பட்டன. இந்த மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதாக நினைத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள், லாரி ஓட்டுநர்களை மர்ம நபர்கள் தாக்கினர்.
 இதையடுத்து, காவல் துறை மூலம் பாதுகாப்புடன் ஐந்து லாரிகளும் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஒசூருக்கு வந்த மாடுகளை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார். இதையடுத்து, பாதுகாப்புடன் மாடுகள் அனைத்தும் செட்டிநாடு அரசு பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com