தருமபுரி, கிருஷ்ணகிரியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தருமபுரியில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள், திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

தருமபுரியில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள், திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவர் தழுவி வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தருமபுரி நகரப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், ராமக்காள் ஏரியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், ஏழைகளுக்கு ஆடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து, நண்பகலில் அசைவ உணவு சமைத்து, தங்களது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினர்.
இதே போல, பாலக்கோட்டில் மர்கஸ் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் இருந்து ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு சென்று அங்கு ரமலான் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். பென்னாகரம், தொப்பூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் அங்குள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
அரூரில்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டப்பட்டது. அரூர் பெரியார் நகர், மேல்பாட்சாபேட்டையில் உள்ள பள்ளி வாசல்களில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தி ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக திங்கள்கிழமை கொண்டாடினர்.
கிருஷ்ணகிரியில் ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலானையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சிறப்புத் தொழுகையை அடுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், இனிப்புகள் வழங்கியும் ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோர் புத்தாடை
அணிந்திருந்தனர்.
ரமலானையொட்டி இஸ்லாமியர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் விருந்துண்டனர். இம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, பர்கூர், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com