சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம்

கிருஷ்ணகிரியில்   சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (ஜூன் 28)  முதல்  இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரியில்   சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (ஜூன் 28)  முதல்  இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து,  கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், செவ்வாய்க்கிழமை  வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாளதார மேம்பாட்டு கழகம்  மூலம் சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும்,  சந்தேகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகவும்,  கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் சிறப்பு முகாம்கள் நடத்தபடுகின்றன.  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையின  நல அலுவலகத்திலும்,  கிருஷ்ணகிரி  கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்திலும் ஜூன் 28,  29 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறுகிறது.
இதில் தனிநபர் கடன், கல்விக் கடன்,  சுயஉதவிக்குழுக்கான கடன், ஆட்டோ  கடன் தொடர்பாக விளக்கம்  அளிக்கப்படுகிறது. மேலும், கடனுக்கான விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.  எனவே, இந்த முகாமியில் சிறுபான்மையினத்தவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு  அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com