12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தளி ஏரி

12  ஆண்டுகளுக்கு பிறகு தளி வண்ணம்மா ஏரி நிரம்பியது .

12  ஆண்டுகளுக்கு பிறகு தளி வண்ணம்மா ஏரி நிரம்பியது .
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் தளி தொகுதியிலேயே மிகப் பெரிய ஏரியாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணம்மா ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சாரண்டப்பள்ளி, கக்கதாசம், திருமாளிகை, சாதிநாயகனப்பள்ளி, மல்லசந்திரம், சின்னதொகரை, சீர்த்திமனட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு போதிய மழையின்மையால் ஏரி வறண்டுக் கிடந்தது. இதைத் தொடர்ந்து, ஏரியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டன.
இந் நிலையில், தளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர் மழையால் வண்ணம்மா ஏரி நிரம்பி வந்தது. புதன்கிழமை இரவு தளி பகுதியில் பெய்த பலத்த மழைக்கு வண்ணம்மா ஏரி முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து, கக்கதாசம் வழியாக சனத்குமார் நதியில் கலந்தது.
ஏரி முழு கொள்ளவு எட்டியதை அறிந்த கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தும், ஆடுகள் வெட்டியும் வழிபட்டு வருகின்றனர்.
ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com