தென்னக நதிகளை இணைக்கக் கோரி அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்புஅறக்கட்டளையினர் பாத யாத்திரை

தென்னக நதிகளை இணைக்க வலியுறுத்தி,  தலைக் காவிரியிலிருந்து பூம்புகாருக்கு பாத யாத்திரை மேற்கொண்ட அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையினர் சனிக்கிழமை ஒசூர் வந்தனர்.

தென்னக நதிகளை இணைக்க வலியுறுத்தி,  தலைக் காவிரியிலிருந்து பூம்புகாருக்கு பாத யாத்திரை மேற்கொண்ட அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையினர் சனிக்கிழமை ஒசூர் வந்தனர்.
பாத யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
புனித நதியான காவிரியைப் பாதுகாக்க வேண்டும். தமிழக- கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாக உள்ள காவிரி நதி நீண்ட தொலைவுகளைக் கடந்து இறுதியில் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. புனிதமான காவிரியில் கழிவுநீர், ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்துள்ளது.
காவிரிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். கங்கை நதியை தூய்மையாக்க நிதி ஒதுக்கியதை போல காவிரியையும்
தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதிக்க வலியுறுத்தியும், நதிகளை தேசிய மயமாக்குவதை அமல்படுத்த முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வலியுறுத்தியும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம் என்றனர்.
அகில பாரதிய தரவியர்கள் சங்கத்தின் செயலாளர் சுவாமி ராமானந்தா தலைமையில் சுவாமி வேதானந்தா, ஞானேஸ்வரி,  அன்னை நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை துணைத் தலைவர் அம்சராஜ், பொருளாளர் வாசு, நிர்வாகிகள் புஷ்பலிங்கம், ஜெயா தங்கவேல் உள்பட பலர் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com