ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கைது

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட வெள்ளிக்கிழமை கூடினர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்து தடை விதித்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 பெண்கள் உள்பட 500 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மதியம் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com