கறவை மாடுகளுக்கான மடிவீக்க நோய் விழிப்புணர்வு பயிற்சி

பண்ணந்தூரில் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்ணந்தூரில் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பண்ணந்தூரில் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்றது. 
வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ் தலைமை வகித்தார். கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் விஜயகுமார், கால்நடை மருத்துவர்கள் மோச சேகர், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியில் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்கம் நோய் குறித்தும், இந்த நோய் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நோய் தாக்குதலுக்கு உள்ளான கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com