ஒகேனக்கல் மலையடிவார கிராமத்தில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதம்

ஒகேனக்கல் காவிரிக் கரையோரக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்ததை அடுத்து, மண் சுவர் கொண்ட

ஒகேனக்கல் காவிரிக் கரையோரக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்ததை அடுத்து, மண் சுவர் கொண்ட குடிசைகள் சேதமடைந்தன.  இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்கள் பொருள்களுடன் அருகே மலைமேல் ஏறி தங்கியுள்ளனர். 
ஒகேனக்கல் பகுதியிலுள்ள காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் புளியமரத்துக்கொம்பு கொண்டலாம்கொட்டாய் என்ற காவிரிக் கரையோரக் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்தது.
சுமார் 15க்கும் மேற்பட்ட மண் சுவர் கொண்ட குடிசைகள் இங்குள்ளன. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தண்ணீர் வரவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து குடிசைப் பகுதிக்குள் புகுந்துள்ளது.
இதனால், சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறி, அருகிலுள்ள மலை மீது ஏறி தங்கியுள்ளனர்.
வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களைப்பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், சேதங்களைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com