தடைகளைச் சந்திப்பவர்கள் மட்டுமே சாதனையாளராக முடியும்: புலவர் அ.ம.ராமலிங்கம்

தடைகளைச் சந்திப்பவர்களால் மட்டுமே வாழ்வில் சாதிக்க முடியும் என்றார் புலவர் அ.ம.ராமலிங்கம்.

தடைகளைச் சந்திப்பவர்களால் மட்டுமே வாழ்வில் சாதிக்க முடியும் என்றார் புலவர் அ.ம.ராமலிங்கம்.
ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சீனிவாச கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இன்றைய இளைய சமூகத்தின் பாதை சிகரங்களை நோக்கியே' எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் புலவர் அ.ம.ராமலிங்கம் தீர்ப்பு தொடர்பாக பேசியது:
மனித வாழ்க்கையில் இரண்டு பாதைகள் உண்டு. கரடு, முரடான பாதை மற்றொன்று சிரமம் இல்லாத நல்ல பாதை. இதில், சிரமங்களையும், தடைகளையும் சந்திப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாய், தந்தை, ஆசிரியர்கள் ஆகிய மூவரும்தான் கடவுள்கள். எனவே, இன்றைய இளைய சமூகத்தின் பாதை சிரமங்களைச் சந்தித்து, சிகரங்களை அடைவதே என பட்டிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார்.
முன்னதாக பட்டிமன்றத்தில் பேசிய பேராசிரியர் குரு. ஞானம்பிகை, "இன்றைய இளைஞர்கள் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். நாட்டுக்கு உழைக்கும் ராணுவ வீரர்களும், பொது சேவையில் ஈடுபவர்களும் இளைஞர்களே. தன் உயிரையும் தந்து பிறரைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டவர்கள் இளைஞர்கள் மட்டுமே' என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் கவிதா ஜவகர்,"விவசாயிகள், ஏழை தொழிலாளர்களின் குழந்தைகள்கூட இன்று உயர் கல்வி பெற்றுள்ளனர். கிராமப் பகுதியில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுகின்றனர். எனவே, இன்றைய மாணவர்கள், இளைஞர்களின் பாதை சிகரங்களை நோக்கியே செல்கிறது' என்றார்.   
இன்றைய இளைய சமூகத்தின் பாதை சிரமங்களை நோக்கியே என கவிஞர் கோவை உமா மகேஸ்வரி பேசுகையில், நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு  
பாதுகாப்பு இல்லை. மாணவ, மாணவிகளுக்கு கற்றல் என்பது  மகிழ்ச்சியானதாக  இல்லை. சாதிப்பவர்கள் அனைவரும் சிரமங்களை நோக்கியே பயணிக்க வேண்டியுள்ளது என்றார்.
தொடர்ந்து, புலவர் கல்பாக்கம் ரேவதி பேசுகையில்,  சிறுவர்களிடம் இரு சக்கர வண்டிகள் தருவதை பெற்றோர்கள் முற்றிலும் கைவிட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் நவீன தொழில் நுட்பம் கொண்ட செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இன்றைய சிறுவர்கள் செல்லிடப்பேசியால் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேரிடுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com