"புத்தக வாசிப்பு  நல்ல சிந்தனைகளை உருவாக்கும்'

புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும் என காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும் என காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: புத்தகங்கள் வாசிப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு புத்தகம் ஐரோப்பிய நாட்டின் வரலாற்றையே புரட்டி போட்டது. புத்தகங்கள் வாசிப்பு நல்ல கனவுகளை உருவாக்கும். அதன் மூலம் நல்ல சிந்தனைகள் மேம்படும் என்றார். இறுதியாக நகைச்சுவை பாட்டு மன்றம் நடைபெற்றது. தமிழ்ச் சமுதாயம் வளம் பெற பாடிய திரையிசைக் கவிஞர்கள் அன்றையக் கவிஞர்களே இன்றையக் கவிஞர்களே என்னும் தலைப்பில் நடைபெற்றது. இறுதியாக வே.சென்னகிருட்டிணன் நன்றி கூறினார்.
ஊடக அரங்கம்: விழாவில் நடைபெற்ற ஊடக அரங்கிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் இ.சாகுல்அமீத், சே.ராசேந்திரன், சித.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.வடிவேல் வரவேற்றார். ஊடக வலைக்குள் உலகு என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சன் டி.வி வீரபாண்டியன் தலைமை வகித்தார். காவேரி தொலைக்காட்சி ஆசிரியர் ஹேமா ராக்கேஷ், கலைஞர் தொலைக்காட்சி ஜான்தன்ராஜ் ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com