போச்சம்பள்ளியில் பன்னிரு தமிழ்வேதப் பெரு விழா

போச்சம்பள்ளியில் பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா சிவ பூஜை மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றன.

போச்சம்பள்ளியில் பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா சிவ பூஜை மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு,  கர்நாடகம்,  புதுச்சேரி  ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
போச்சம்பள்ளியில் 29-ஆம் ஆண்டு பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா சிவபூஜை மாநாடு மூன்று நாள்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. முதல் நாள் நடைபெற்ற சிவபூஜை மாநாட்டுக்கு காரைக்கால் பாலசுப்பிரமணியம், செல்வரங்கம், பாலாஜிராம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர், சுகந்தி சுரேஷ், கலைவாணி ஆறுமுகம்,  சக்திவேல் ஆகியோர் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் அர்த்தநாரி  பன்னிரு தமிழ்வேதங்களுடன்  சிவனடியார்கள் ஆடிப்பாடி வீதி உலா நடைபெற்றது.  
சிவபூஜை மாநாடு செய்யாறு ராமலிங்கத்தின்  தமிழ்வேத இசை முழக்கத்துடன் நடைபெற்றது. பிற்பகல் குடியாத்தம் பக்தவச்சலம்,  பவானி வேலுசாமி ஆகியோரின் சொபொற்பொழிவு நடைபெற்றது. 2-ஆம் நாள் இரவு ஐந்தெழுத்துப் பெருவேள்வி  நடைபெற்றது.  மூன்றாம் நாள் நிறைவு விழாவில் திருமுறை நாதருக்கு கோடி அர்ச்சனை நடைபெற்றது. பக்தவச்சலம், புதுச்சேரி முருகசாமி ஆகியோரின் சொற்பொழிவு நடைபெற்றது. மாலை தமிழ்வேத இசை முழக்க கருத்தரங்கம், சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமுறைக்கோடி அர்ச்சனை,  சொற்பொழிவு, தமிழ்வேத இசை முழக்கம் நடைபெற்றன. சென்னை ராமமூர்த்தி குழவினர் திருப்பள்ளியெழுச்சி பாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com