விவசாயியால் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி எரிப்பு

கிருஷ்ணகிரி அருகே விவசாயியால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலை, நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் திங்கள்கிழமை, தீயிட்டு எரித்தனர்.

கிருஷ்ணகிரி அருகே விவசாயியால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலை, நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் திங்கள்கிழமை, தீயிட்டு எரித்தனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை அருகே உள்ள மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி, தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை அரிவாளால் வெட்டி ஞாயிற்றுக்கிழமை கொன்றார். இதுகுறித்து, தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். வனத் துறையின் கால்நடை மருத்துவர் ஏ.பிரகாஷ், பிரேதப் பரிசோதனை செய்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 நீதிபதி (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நீதிமன்றத்தில்சிறுத்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறுத்தையின் உடலை தீயிட்டு எரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, உயிரிழந்த சிறுத்தையின் உடலை, வனத் துறையினர் கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலக வளாகத்தில் தீயிட்டு திங்கள்கிழமை எரித்தனர்.
இந்தநிலையில், மாவட்ட வன அலுவலர் தீபக் பல்கி தெரிவித்தது: சிறுத்தையைக் கொன்ற விவசாயி ராமமூர்த்தி மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரைக் கைது செய்யவில்லை. மேலு, வன விலங்குகளைத் தாக்குபவர்கள் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com