ஒசூர் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் ஆய்வு

ஒசூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் ரூ.1.25 கோடியிலான திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். 

ஒசூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் ரூ.1.25 கோடியிலான திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஒன்றியம் பூனப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சாலைப் பணிகள், ஏரி மராமத்து பணிகள் மற்றும் பல்நோக்கு கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, பூனப்பள்ளி ஊராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பிரபாவதி, பில்லப்பா ஆகியோர்களின் பசுமை வீடுகள் கட்டுமான பணிகளையும், பூனப்பள்ளி சாலை முதல் சின்னபேளகொண்டப்பள்ளி வரை ரூ. 2 கி.மீ, தூரத்துக்கு தாய் 2 திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சத்தில் தார்ச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் ,, ரூ. 7. 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலைகள் பணிகளையும், எடப்பள்ளி கிராமத்துக்கு மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சத்தில் 1.5. கி.மீ. தூரத்துக்கு இணைப்புச் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும்,   மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சாந்தி, சென்னகிருஷ்ணன், ஒன்றியப் பொறியாளர்கள் தேவராஜன், தமிழ்,கௌல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com