வேப்பனஅள்ளி ஸ்ரீ கோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா

வேப்பனஅள்ளி அருகே உள்ள பூதிமுட்லுவில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேப்பனஅள்ளி அருகே உள்ள பூதிமுட்லுவில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பூதிமுட்லு ஸ்ரீ கோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா, கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இந்த நிலையில், தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
இந்த விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, சூளகிரி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மார்ச் 4-ஆம் தேதி பல்லக்கு உற்சவம், வான வேடிக்கை போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com