மார்ச் 23-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மார்ச் 23-இல் தனியார் துறை சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது  என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் மார்ச் 23-இல் தனியார் துறை சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது  என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற 23-ஆம் தேதி அலுவலக வளாகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, கணினி இயக்குநர், கணக்கர், விற்பனையாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடியாக ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளன. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக் கல்வி, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல, இம்முகாமில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்கள் 04348-235006 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது இலவச சேவை என்பதால் பணிக்கு தேர்வாகும் நபர்களது பெயர் பதிவு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்றார்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கு மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  கணினித் துறையில் வரைக்கலை,  தொழில்நுட்ப உதவியாளர், விற்பனைப் பிரதிநிதி ஆகி பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, 21 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த முகாமில் பங்கேற்கத் தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். கிருஷ்ணகிரி,  ஒசூர், சென்னை ஆகிய இடங்களில் பணியாற்ற வேண்டும். விருப்பமுள்ள தகுதியானவர்கள், அனைத்துக் கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com