போச்சம்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

போச்சம்பள்ளியை அடுத்த பாரண்டப்பள்ளி அருகே சின்ன பாரண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

போச்சம்பள்ளியை அடுத்த பாரண்டப்பள்ளி அருகே சின்ன பாரண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிஎன். ரகுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, போச்சம்பள்ளி தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முனுசாமி, பர்கூர் வாட்டர வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ வரவேற்றார்.
முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் ஒரு நபருக்கு வீட்டு மனை பட்டா 50 ஆயிரம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 22 ஆயிரத்து 500 நலத்திட்டங்களும், வேளாண் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5, 195 மதிப்பில் நலத்திட்டங்களும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 28,904 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் அனைத்து நிலை அரசு அலுவலக அலுவலர்களும் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, சமூக பாதுகாப்புத் திட்ட உதவியாளர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் லெனின், ராகேஷ்சர்மா, தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரண்டப்பள்ளி கிராம நிவாக அலுவலர் சர்வேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com