தசரா நிறைவு: கிருஷ்ணகிரியில் 11 கோயில் தேர்கள் அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் தசரா விழா நிறைவு பெறுவதையொட்டி 11 கோயில்களின் தேர்கள் ஒரே இடத்தில் அணிவகுத்த நிலையில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை


கிருஷ்ணகிரியில் தசரா விழா நிறைவு பெறுவதையொட்டி 11 கோயில்களின் தேர்கள் ஒரே இடத்தில் அணிவகுத்த நிலையில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன .
கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவையொட்டி, கோயில்களில் கொலு பொம்மைகள் வைத்து உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ள நிலையில் கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், ராமர் கோயில், படவட்டம்மாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஞானவிநாயகர் கோயில், கல்கத்தா காளிக்கோயில், கவீசுவரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
இந்த 11 கோயில்களின் தேர்கள் கிருஷ்ணகிரி காந்தி சிலை அருகே அணிவகுத்து நின்றன. அந்தத் தேர்களுக்கு பம்பை முழங்க வழிபாடு நடத்தி வன்னி மரம் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com