அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் பகுதியில் மீனவர்கள் முகாம் அமைப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியூர் சென்றிருந்த மீனவர்கள்திரும்பி வந்து காவிரிக் கரையில் முகாம் அமைத்து வருகின்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியூர் சென்றிருந்த மீனவர்கள்திரும்பி வந்து காவிரிக் கரையில் முகாம் அமைத்து வருகின்றனர்.
 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து நீர்வரத்து இல்லாமல் இருந்தபோது மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் முகாமிட்டிருந்த மீனவர்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு சென்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பினர். அடிப்பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, ஏமனூர், நாகமரை பகுதிகளில் மீனவர்கள் முகாம்களை அமைத்து வருகின்றனர். மீனவர்கள் வருகைக் காரணமாக வெறிச்சோடி கிடந்த காவிரிக் கரையில் மக்கள் நடமாட்டம் மீண்டும் காணப்படுகிறது.
 அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரிக் கரையில் விவசாயிகள் பயி ர் செய்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கத் தொடங்கின. நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விவசாயிகள் தங்களுடைய பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் போனதாக தெரிவித்தனர். தங்களது பயிர்கள் மூழ்கினாலும் அணைக்கு தண்ணீர் வந்தது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com