கருமந்துறையில் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கருமந்துறை பகுதியில் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் ஆய்வு செய்தார்.
கருமந்துறையில் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கருமந்துறை பகுதியில் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பேசியது:
பருவமழை தமிழகத்தில் போதிய அளவு பெய்யாத காரணத்தால் தமிழக அரசு விவசாயிகள் நுண்ணுநீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்திட மானியம் வழங்கி வருகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கென நுண்நீர்ப் பாசனத்துக்கு அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
நிலப் போர்வை அமைத்திட அனைத்து விவசாயிகளுக்கும் தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், நிரந்தர கால்பந்தல் அமைத்துக் கொடிவகை சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க மானியமாக ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மா, கொய்யாவில் அடர்நடவு செய்யவும், பப்பாளி போன்ற பழ வகை கன்றுகள் விவசாயிகளுக்கென இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், பழைய மா மரங்களை கவாத்து செய்து விளைச்சலை அதிகரிக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெங்காயம் உற்பத்தியில் உயர் விளைச்சல் பெரும் வகையில் வெங்காய விதைகள், இடுபொருள்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மருந்து கூர்கன், சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,600 வரை மானியம் வழங்கப்படுகிறது.
தேனீ வளர்ப்பு மூலம் விவசாயிகள் உற்பத்தி பெருக்கும் நோக்கோடு 40 சதவீத மானியத்தில் ஒரு தேனீ கூட்டத்துடன் உள்ள தேனீ பெட்டிக்கு ரூ.1,600 வீதம் வழங்கப்படுகிறது.
குளித்தட்டு முறையில் மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் நிழல்வலை குடில்கள் அமைத்து மஞ்சள் நாற்று உற்பத்தியை அதிகரித்திட 50 சதவீத மானியத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு ரூ.1.42 லட்சமும், மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்திட இடு பொருள்களுக்காக ரூ.14,750, பயிற்சிக்காக ரூ.1000 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பம் உள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) செளந்தரராஜன், துணை இயக்குநர் (தோட்டகலை) பிரபு, தோட்டக்கலை அலுவலர் கணேசன், வேளாண்மை அலுவலர் ஜோஸ்வா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com