ஏழை பெண்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட சமூகநலத் துறையின் வாயிலாக ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்ட சமூகநலத் துறையின் வாயிலாக ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 சேலம் மாவட்ட சமூகநலத் துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழ் ரூ.72,000-க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்), இருப்பிடச் சான்றிதழ் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது குடும்ப அட்டை), தையல் பயிற்சி சான்றிதழ் (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து 6 மாத கால பயிற்சி பெறப்பட்டது), வயது சான்றிதழ் (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்றிதழ் அல்லது பிறப்புச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு மனுதாரரின் வண்ணப் புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
 நிறைவு செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்126 முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் என்ற முகவரிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com