மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆத்தூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்க ப

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்க பரிசோதனை முகாமும் திங்கள்கிழமை (ஜூலை17) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து கெங்கவல்லி வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்(பொறுப்பு) சுஜாதா கூறியதாவது:
 கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 0 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
 இம்முகாமில் பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர் , மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் ஊனமுற்றோர், பேச்சுக்குறைபாடு உடையோர் போன்றோர் பங்கேற்று, தங்களுக்கு தேசிய அடையாள அட்டை , உதவி உபகரணம், அறுவைச் சிகிச்சைக்கு தேர்வுக்கு தேர்வு பெறுதல் ஆகிய பயன்களை பெறலாம். அடையாள அட்டையுள்ள மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளத் தேவையில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் முகாமிற்கு வரும்போது, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் எடுத்து வர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com