ஊருக்குள் வர மறுக்கும் தனியார் பேருந்துகள்: வாழப்பாடி பகுதி பயணிகள் அவதி

சேலம் ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்துகள், வாழப்பாடி ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்துகள், வாழப்பாடி ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 வாழப்பாடி பேரூராட்சி, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. தாலுகா தலைமையிடமான வாழப்பாடி 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாகும்.
 வாழப்பாடி பேரூராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களும், வாழப்பாடியில் இருந்து சேலம் ஆத்தூர் வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
 சேலம் மற்றும் ஆத்துôர் பேருந்து நிலையங்களில் இருந்து வாழப்பாடி வழியாக இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் புறவழிச்சாலையில் செல்வதாக் கூறி, நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்கள் வாழப்பாடி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.
 அதனால், குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் வாழப்பாடி பகுதி பயணிகள் சேலம் மற்றும் ஆத்துôர் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
 அதுமட்டுமின்றி, பெரும்பாலான தனியார் பேருந்துகள் வாழப்பாடி ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் இயக்கப்படுகின்றன. அதனால், சேலம், ஆத்துôருக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
 இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வாழப்பாடி வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து கடந்தாண்டு அமைதிக் குழுக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அப்போது அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் வாழப்பாடி பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர நடவடிக்கை எடுப்பதெனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 ஆனால் தற்போது வரை இந்தப் பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கும் வாழப்பாடிக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்.
 இதுகுறித்து வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜே.கே ஜெயகிருஷ்ணா கூறியது:
 இரவு நேரங்களில் வாழப்பாடி யணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அனைத்து பேருந்துகளும் வாழப்பாடி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com