கெங்கவல்லியில் இன்று முதல் ஜமாபந்தி தொடக்கம்

கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.

கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
 ஜூன் 20-ஆம் தேதி உலிபுரம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி வடக்கு, தெற்கு, தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம், செங்காடு, சேரடிமூலை, கள்ளிப்பட்டி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 21-ஆம் தேதி ஒதியத்தூர், 74.கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கடம்பூர், கூடமலை, பேளூர், கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, மண்மலை, மொடக்குப்பட்டி ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 22-ஆம் தேதி கெங்கவல்லி வடக்கு, தெற்கு, ஆணையாம்பட்டி, தெடாவூர் வடக்கு, தெற்கு, நடுவலூர் தெற்கு, வடக்கு ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 27-ஆம் தேதி சொக்கனூர் அகரஹாரம், வீரகனூர் தெற்கு, வடக்கு, திட்டச்சேரி, லத்துவாடி, வெள்ளையூர், நாட்டார் அக்ரஹாரம், இலுப்பநத்தம் ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 28-ஆம் தேதி வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, பகடப்பாடி, கிழக்குராஜாபாளையம், பின்னனூர், கவர்பனை, பச்சமலை, வேப்படி ஆகிய ஊர்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
 எனவே, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஜமாபந்தியில் வழங்கலாம் என கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com