'அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பள்ளி பராமரிப்பு நிதி ரூ.1.30 கோடி வழங்கப்படும்

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி பராமரிப்பு மானியமாக ரூ.1.30 கோடி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி பராமரிப்பு மானியமாக ரூ.1.30 கோடி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியர் வா.சம்பத் பேசியது :
சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் 2017-18-ஆம் கல்வியாண்டில் 1752 அரசு பள்ளிகளில் 17,046 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாதம் தோறும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட 6097 மாணவர்கள் பல்வேறு செயல்பாடுகள், மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள், பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் 942 மாணவர்களுக்கு போக்குவரத்து செலவினம் ஆகியவை வழங்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 222 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 284 நடுநிலைப் பள்ளிகளிலும், 3 உயர்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 512 கணினி வழிக் கல்வி மையங்களுக்கு 1,279 கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 5,136 தொடக்க நிலை மற்றும் 3,615 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 1125 இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு 906 குழந்தைகள் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் பள்ளிகளில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெண் கல்வியில் பின் தங்கியுள்ள 12 வட்டாரங்களில் 13 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
இடைநின்ற மற்றும் பள்ளிச்செல்லா 10 வயது முதல் 14 வயது வரையிலுள்ள பெண் குழந்தைகளை மீண்டு கல்வி பெற வாய்ப்பளிக்கும் வகையில் 930 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,552 பள்ளிகளுக்கு, பள்ளி மானியமாக தலா ரூ.5,000 வீதம் ரூ.77.60 லட்சம் வழங்கப்படவுள்ளது.
6 முதல் 8 வகுப்பு உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 691 பள்ளிகளுக்கு, பள்ளி மானியமாக தலா ரூ.7,000 வீதம் ரூ.48.37 லட்சம் வழங்கப்படவுள்ளது.
மேலும் பள்ளி பராமரிப்பு மானியமாக 1738 அரசுப் பள்ளிகளில் 3 வகுப்பறை உள்ள பள்ளிகளுக்கு தலா ரூ.5,000 வீதமும், 3 வகுப்பறைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.1.30 கோடி வழங்கப்படவுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி, மகளிர் திட்டஅலுவலர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com