எடப்பாடியில் நூதன முறையில் நகை பறிப்பு: இருபெண்கள் கைது

எடப்பாடியில் பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

எடப்பாடியில் பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி அம்மன் நகர், மேடை முத்துமாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி கண்ணம்மாள் (55). இவர் புதன்கிழமை எடப்பாடி கடைவீதி பகுதியில் நடந்து சென்றார். அப்போது, இரு பெண்கள், கண்ணம்மாளிடம் நகைகளை கழற்றிப் பத்திரமாக வைக்கும்படி கூறினராம். இதை நம்பிய கண்ணம்மாள் தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி ஒரு காகிதத்தில் மடித்து வைத்துள்ளார். இதையடுத்து, அவருடன் பேசிய இரு பெண்களில் ஒருவர், தனது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தங்களிடம் உள்ள தங்கக் காசை கடைவீதியில் உள்ள நகைக் கடையில் விற்கப் போவதாகவும், குறைவான விலை தருவதாகக் கூறினால், உனக்கே கொடுத்து விடுகிறேன் என கண்ணம்மாளிடம் கூறினர். இதை நம்பிய கண்ணம்மாள், தன்னிடம் இருந்த தங்க நகைகளைக் கொடுத்துவிட்டு, கூடுதலாகப் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். நகைகளைப் பெற்றுக் கொண்ட பெண்கள் அங்கிருந்து சென்றனர். தங்க காசுகளை கண்ணம்மாள் பரிசோதித்துப் பார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது.
இது குறித்து கண்ணம்மாள், எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் நின்று கொண்டிருந்த, கர்நாடக மாநிலம், சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவிபானு (23) , பிரியா (22) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com