மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 28.77 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 49 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 7.04 டி.எம்.சி.யாக இருந்தது.