ஏற்காடு கோடை விழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

42-ஆவது ஏற்காடு கோடைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் திஙகள்கிழமை நடைபெற்றது.
ஏற்காடு கோடை விழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

42-ஆவது ஏற்காடு கோடைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் திஙகள்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்தில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 தோட்டக்கலைத் துறை சார்பில் வண்ணப் பூக்களைக் கொண்டு பூக்களின் மாதிரி வடிவமைப்பு, அலங்காரப் பூக்களின் தொட்டிகளுக்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளவும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய் கண்காட்சி மேற்கொள்ளவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, தவழும் குழந்தைகள் போட்டி நடத்தவும், மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப் போட்டிகள் நடத்தவும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தவும், சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

 மேலும், வனத் துறையின் சார்பில் அலங்கார வளைவுகள் அமைத்திடவும், ஏற்காடு சுற்றி தூய்மைப் பணியினை மேற்கொள்ளவும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலையில் உள்ள பழுதை உடனடியாக நிவர்த்தி செய்திடவும், வருவாய்த் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

 கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கே.கவிதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபு உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 கனரக வாகனத்துக்கு தடை: ஏற்காடு மலைப் பாதையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெறுவதால், அடிவாரம் முதல் ஏற்காடு வரை உள்ள மலைப் பாதையில் பேருந்து நீங்கலாக கனரக வாகனப் போக்குவரத்து மே 9-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com