பப்பாளி நடவு செய்ய தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரப் பகுதிகளில் பப்பாளி விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரப் பகுதிகளில் பப்பாளி விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் குறைந்தபட்ச நீர்ப் பாசன முறையில் நாட்டு ரக பப்பாளியை நடவு செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி முற்றிலும் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. வீரிய ஒட்டு ரக பப்பாளி நாற்று ஒன்று ரூ.20 விலையில் கிடைக்கிறது. இந்த நாற்றை வாங்கி நாற்று ஒன்றுக்கு ஏழு அடி இடைவெளியில் நடவுச் செய்ய வேண்டும். மருத்துவக் குணம் நிறைந்த, சத்துகள் மிகுந்த பப்பாளி செடிகளுக்கு அடி உரமாக மண் புழு, கால்நடை எருவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த வேண்டும். எட்டு மாதத்தில் பூப்பூக்கத் தொடங்கும் பப்பாளி, நடவு செய்த 11-ஆவது மாதத்தில் இருந்து காய்களை கொடுக்கும்.
இதில்,தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு காய்களைப் பறிக்க முடியும். பராமரிப்பைப் பொறுத்து அதிக மகசூல் கிடைக்கும். பப்பாளி ஒரு கிலோ ரூ.15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வாரம் ஒரு முறை இரண்டு டன் எடையளவில் காய்கள் கிடைக்கும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளில், ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், ஆர்வமுள்ள விவசாயிகள் பப்பாளியை நடவு செய்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com