திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலை மேம்பாலம் விரைவில் திறப்பு

சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என தெரிகிறது.

சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என தெரிகிறது.
சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு ரயில் நிலையம் செல்வதற்கு ஏ.வி.ஆர்.ரவுண்டானா வழியாகவும், மூன்று சாலை திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலையைக் கடந்தும் செல்ல வேண்டி உள்ளது.
இந்த இருசாலை சந்திப்புகளும் பெங்களூரு - கொச்சி செல்லும் சாலை என்பதால் எப்போதும் வாகனங்கள் இருபுறமும் சென்று வருவதால், நகரப் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த இரு சாலை சந்திப்புகளைக் கடக்கும் போது அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலையும், சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும் கந்தம்பட்டி புறவழிச்சாலை முதல் குரங்குச்சாவடி வரையிலான சாலையில் இரு மேம்பாலங்களை நெடுஞ்சாலைத் துறை கட்டி வருகிறது.
அதன்படி முதலாவதாக திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலையில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி 99 சதவீத அளவுக்கு நிறைவுப் பெற்றுள்ளது.
தற்போது, மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு சென்டர்மீடியன் ஏற்படுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த மேம்பாலம் வாகனப் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும், இம்மாத இறுதியில் திறப்பு விழா நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com