கெங்கவல்லியில் தேசிய திறனாய்வுத் தேர்வு

கெங்கவல்லி வட்டாரத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 6 பள்ளிகளில் திங்கள்கிழமைநடைபெற்றது.

கெங்கவல்லி வட்டாரத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 6 பள்ளிகளில் திங்கள்கிழமை
நடைபெற்றது.
நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே என்ற தேசிய திறனாய்வுத் தேர்வு கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் கடம்பூர், உலிபுரம் அண்ணாநகர், கூடமலை ஆகிய 3 தொடக்கப் பள்ளிகளிலும், காந்தி நகர், கெங்கவல்லி 10-ஆவது வார்டு ஆகிய பகுதிகளிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், கூடமலை அரசு மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 6 பள்ளிகளில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் கல்வியியல் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியரைக்கொண்டு இத்தேர்வு நடைபெற்றது. 6 பள்ளிகளில் நடைபெற்ற இத்தேர்வை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இத்தேர்வு, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்  தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com