விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆட்சியர்

எடப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழந்த வாகன விபத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டார்.

எடப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழந்த வாகன விபத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
சேலத்தில் இருந்து எடப்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை நெய்க்காரப்பட்டியில் சரக்கு லாரி ஒன்று திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் சென்ற காவல் துறை வாகனமும், அதைத் தொடர்ந்து சென்ற தனியார் பேருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், காவல்துறை வாகனத்தில் இருந்த காவல் துறையினருக்கும், தனியார் பேருந்தில் இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
அச்சமயத்தில், சேலத்திலிருந்து எடப்பாடிக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், விபத்தை கவனித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், அங்கு வந்த 108 வாகனத்தில் காயமுற்ற காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு அருகில் இருந்த கடையிலிருந்து தண்ணீர் வாங்கி வர செய்து கொடுத்ததுடன், முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள சங்ககிரி சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com