அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

டெங்கு பரவாமல் தடுப்பதற்காக  சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப்படுத்தும்  பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

டெங்கு பரவாமல் தடுப்பதற்காக  சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப்படுத்தும்  பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவையற்ற செடிகள்,  புதர்கள், குப்பைகளை சங்ககிரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.   இதை கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் ஆய்வு செய்தார்.
அப்போது,  தேவையற்ற செடிகளை பொக்லின் இயந்திரகளை கொண்டு அகற்றவும்,  மருத்துவ அலுவலர் குடியிருப்பு சிதலமடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றவும் அறிவுறுத்தினார்.  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்  பிளிச்சீங் பவுடர் தெளிக்க உத்தரவிட்டார்.  
அப்போது மருத்துவ அலுவலர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன்,  பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் பி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com