சேலம் காவல் ஆணையராக கே.சங்கர் பொறுப்பேற்பு

சேலம் மாநகரக் காவல் ஆணையராக கே.சங்கர் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாநகரக் காவல் ஆணையராக கே.சங்கர் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 சேலம் மாநகரக் காவல் ஆணையராக இருந்து வந்த சஞ்சய்குமார், சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
 இதையடுத்து, சென்னையில் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த கே.சங்கர், சேலம் மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கே.சங்கர் புதன்கிழமை காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
 சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரௌடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்திட போதிய நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே.சங்கர், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்று, சிவகாசியில் கூடுதல் எஸ்.பி., கோவையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பணியாற்றி உள்ளார். புதுக்கோட்டை, நீலகிரி, கிழக்கு செங்கல்பட்டு, கரூர் ஆகிய இடங்களில் எஸ்.பி.யாகப் பணியாற்றி உள்ளார்.
 மேலும், பதவி உயர்வு பெற்று சென்னையில் இணை ஆணையராகவும், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி-யாகவும் பணியாற்றி உள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com