போட்டி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளியிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: முதன்மைக் கல்வி அலுவலர்

பள்ளி மாணவ, மாணவியர் போட்டி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள இணையதளம் மூலம் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர் போட்டி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள இணையதளம் மூலம் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவ, மாணவியர், அனைத்து வகையான போட்டித் தேர்வுகள் மூலம் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன.
இதில் 412 பயிற்சி மையங்களில் விருப்பம் உள்ள மாணவ, மாணவிகளின் பெயர்களை t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n  இணையதளம் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே தலைமையாசிரியர்கள் US​ER ID எண்ணை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள், தாங்கள் பயிலும் பள்ளியிலேயே மேற்கண்ட இணையதளத்தை (ஆன்லைன்) பயன்படுத்தி, மாணவ, மாணவியர் விரும்பும் ஒன்றிய பயிற்சி மையத்தை தெரிவு செய்து, பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இணையதள (ஆன்லைன்) முகவரி மூலம், பள்ளித் தலைமையாசிரியர் தங்கள் பள்ளிகள் பயிலும் மாணவ, மாணவியரின் பெயர்களை அக்.16 ஆம் தேதி தொடங்கி அக்.26 ஆம் தேதி வரை உள்ள நாள்களில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com