கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 18 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாரமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாரமங்கலம் அருகேயுள்ள மல்லிக்குட்டை கிராமத்தில் சென்றாயப்பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதனைத் தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அப்போது, வழுக்கு மரம் ஏறுவதில், அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் , பொன்னுசாமி தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டதில், சிலர் காயம் அடைந்தனர். இரு தரப்பினரும் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸார், பொன்னுசாமி கோஷ்டியைச் சேர்ந்த மாது என்பவரை கைது செய்தனர். மேலும், இருதரப்பிலும் 2 பெண்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களை உள்நோயாளிகளாக அனுமதிக்காமல் ஊசி மட்டும் போட்டு அனுப்பியதாகப் புகார் தெரித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com