முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதிதமிழர் பேரவையினர் 127 பேர் கைது

சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக,  ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 127 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக,  ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 127 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஆதிதமிழர் பேரவை சார்பில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து,  முதல்வர் வீட்டுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சாலைத் தடுப்புகளை அமைத்து காவல் துறை துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை தலைமையில் 125 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திருவாகவுண்டனூர் மேம்பாலம் அருகே திரண்டிருந்த ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 127 பேரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொள்ள ஒருவர் முயற்சித்தபோது,  போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து,  காரில் வந்து கொண்டிருந்த பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமானையும் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக அதியமான் கூறுகையில்,  "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதைப் போல உள்ளது. வன்கொடுமை சட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டம் 9-ஆவது அட்டவணையில் இணைத்திட வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com