வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன் தேரோட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை துவங்கியது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை துவங்கியது. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
 வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால், புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
 புதன்கிழமை நடைபெறவிருந்த, சுவாமி திருக்கல்யாணம். கரகம் எடுத்தல், அலகுகுத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம், சுவாமி திருத்தேர் ரதமேறுதல், ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தலும் நிகழ்ச்சிகளும் வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து மாலை வரை நடைபெற்றது.
 அதனைத்தொடர்ந்து செல்லியம்மன் தேரோட்டமும், மாரியம்மன் திருத்தேர் நிலைபெயர்த்தலும், கோயிலில் இருந்து அக்ரஹாரம் வைத்திபடையாச்சி தெரு வரை தேரோட்டமும் நடைபெற்றன. வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 வெள்ளிக்கிழமை அக்ரஹாரத்தில் இருந்து ச.வாழப்பாடி சடையக்கவுண்டர் தெரு வரையும், சனிக்கிழமை அங்கிருந்து திருத்தேர் கோயிலுக்குச் சென்று நிலை நிறுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சப்தாபரணம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும், திங்கள்கிழமை மஞ்சள் நீராடுதலும் நடைபெறுகின்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com