பயிர் காப்பீட்டுக்கு கடைசி தேதி அறிவிப்பு

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு வருகிற 16-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண் அலுவலர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு வருகிற 16-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண் அலுவலர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 ஆத்தூர் வட்டாரத்தில் நெல் பயிருக்கு 2016 - 17-ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த 163 விவசாயிகளுக்கு ரூ.12,09,763, மக்காச்சோளம் பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்த 1,320 விவசாயிகளுக்கு ரூ.1,08,01,486 கிடைக்கப் பெற்றுள்ளது. மக்காச்சோளம், பருத்தி போன்ற வேளாண்மை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு செய்ய கடைசி நாள் 16-ஆம் தேதி ஆகும்.
 நிகழாண்டு பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயிகளின் பயிர் சேதமாகாமல் இருக்க மக்காச்சோளத்துக்கு ஒரு ஏக்கருக்கு 464,பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு 607 அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக விவசாயிகள் சிட்டா அடங்கல், விதைப்பு அறிக்கை, ஆதார்அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சேவை மையம் அல்லது வங்கிகளை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com