ஏற்காட்டில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கு

ஏற்காட்டில் சேலம் தரண் மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.


ஏற்காட்டில் சேலம் தரண் மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்குக்கு தரண் மருத்துவமனை பொது மேலாளர் மருத்துவர் வி. செல்வராஜா தலைமை வகித்தார். துணைப் பொது மேலாளர் வி.குணசேகரன் முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் பயிற்றுவிப்பாளர்கள் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்.எம். பாண்டே, அனிர்பன் சௌதிரி, ஜியா சௌதிரி, அமிர்ஷேக் கலந்து கொண்டனர். மருத்துவ உலகில் மருத்துவக் குறிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மருத்துவர்களுக்கு தெரிவிப்பது ஒரு கலை என்றும் தரமான சிகிச்சை பற்றி விவாதிப்பது இக் கருத்தரங்கின் நோக்கம் என்றுகூறப்பட்டது. இதில் 100- க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.வி தனபால் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com