பெரியார் பல்கலை.யில் மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்

பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சென்னை ராமலிங்கர் பணிமன்றம் இணைந்து மாநிலஅளவிலான கலை இலக்கியப் போட்டிகளை சனிக்கிழமை நடத்தியது.


பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சென்னை ராமலிங்கர் பணிமன்றம் இணைந்து மாநிலஅளவிலான கலை இலக்கியப் போட்டிகளை சனிக்கிழமை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் தி. பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். இக்கலை இலக்கியப் போட்டிகளைக் குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்து துணைவேந்தர் பொ. குழந்தைவேல் பேசியது:
இந்த நிகழ்வுக்குக் காரணமானஅருட்செல்வர் நா. மகாலிங்கம் பெரிய வள்ளலாகவும், நாடு முழுவதும் அறிந்த பேரறிஞராகவும் திகழ்ந்தவர். பள்ளி, கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவியர் காந்தியின் கோட்பாடுகளையும், வள்ளலாரின் சிந்தனைகளையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
என்.ஐ.ஏ. கல்விநிறுவனங்களின் செயலர் பேராசிரியர் சி. ராமசாமி பேசும்போது, அருட்செல்வர் மகாலிங்கம் வள்ளலாரின் கொள்கையையும் காந்தியின் வாழ்வையும் இருகண்களாகக் கொண்டுவாழ்ந்தவர். வள்ளலார் காந்தி இருவரது கொள்கையையும் இன்றைய இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றுவிரும்பியவர். அவர் விருப்பத்தைநிறைவேற்றும் வகையில் ராமலிங்கர் பணிமன்றம் பள்ளி,கல்லூரிகளுக்கிடையே பல போட்டிகளை நடத்தி வருகிறது. இளைஞர்களில் திறமையானவர்களைஅடையாளங்கண்டு வெளியுலகத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழகத்தை எட்டுமண்டலங்களாகப் பிரித்து போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுவதோடு, பொள்ளாச்சியில் தலைச்சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு பயிலரங்கம் நடத்தப்படும்.
இப்போட்டிகளின் மூலம் சிறந்த பேச்சாளர்களையும், நல்ல சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்குவதே இம்மன்றத்தின் நோக்கம் என்றார்.
விழாவின் நிறைவாகஅருட்செல்வர் மகாலிங்கனார் மொழி பெயர்ப்பு மையத்தின் பொறுப்பாளர் வி.பாலசுப்பிரமணியன் நன்றிகூறினார். இவ்விழாவில் பல பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழங்களில் இருந்து வருகை புரிந்தஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com