மேட்டூர் அணையின் உபரிநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வீணாக்காமல் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வீணாக்காமல் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் தெரிவித்தார். 
மேட்டூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  கர்நாடகத்திடம் காவிரி நீருக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு கிடைத்த தண்ணீரை தமிழக அரசு முறையாகச் சேமிக்க  தவறிவிட்டது. மேட்டூர் அணையின் உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது. அந்த நீரைக் காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முறையாக திட்டமிட்டு செயல்திட்டங்களை உருவாக்க தமிழக அரசு தவறிவிட்டது. 
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. அதனால் வறண்டு கிடக்கும் ஏரிகளை உபரிநீர் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். உபரிநீர் வீணாவதால்  மேகதாதுவில் அணைக்கட்டுவேன் என்கிறார் கர்நாடக முதல்வர். இதற்குக் காரணம் செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசுதான். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமித்து பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com